பக்கம்:புராண மதங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண மதங்கள் "வெண்ணிறப் பட்டுடுத்திச் சந்தனம் மேனியெலாம் பூசிக் கண்கவர் பூஷணங்கள் அணிந்து கட்டில் அறைநோக்கிப் பெண்கள் பல பேர்கள் - குலவிப் பின்வா முன் நடந்தார்! யார்? மடாதிபதி! சைவ சமயத்தைத் தழைக்கச் செய்து அதன் முலம் மக்களிடை சமரச சன்மார்க் கம் நிலவச் செய்வதற்கென அந்நாள் மன்னர்கள் அளித்த மான்யங்களை', ஆண்டு அனுபவிக்கும் மடாதி பதிகள்! பெண்கள் பின் வர, முன் நடந்த மடாதிபதி, எங்கு சென்றார்? என் செய்தார்? பட்டு மெத்தைதனிலே - மணமே பரவும் பூக்களின் மேல் தட்டினிற் பக்ஷணங்கள் - அருந்திச் சைவத்தை ஆரம்பித்தார். இவ்வளவு சோபிதமாக சைவம் ஆரம்பிக்கப் பட்ட வுடன் "கட்டிக் கரும்பினங்கள் -- சகிதம் கண்கள் உறங்கி விட்டார் மேலும் சில நடந்தன, மடாதிபதி யின் கனவில் . மடாதிபதியின் வாழ்க்கை இருக்கும் விதம் இது வெனக் காட்டவே, கவி இக் கற்பனைக் கவிதையை எழுதினார். ஆனால் அதில் கனவும் பிறவும் கற்பனையாக இருக்கலாம். ஆனால் மடாதிபதிகளின் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருக்கிறதைக் கற்பனை என்று எவரும் துணிந்து கூறார் ! தென்னாட்டில் திவ்ய க்ஷேத்திரங்கள் என்பவை களைப் போன்ற "மகிமைகள்" கற்பிக்கப் பட்டுப் பலப் பல மடங்கள் அமைக்கப்டுள்ளன. முன்னாள் மன்னர்கள் மடங்களுக்கெனக் கிராமங் கிராமமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/53&oldid=1033292" இலிருந்து மீள்விக்கப்பட்டது