பக்கம்:புராண மதங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை பவர் நாமல்ல. நாம் எந்த காரியத்தைச் செய்தாலும், அது, நாத்திகமாகவும், மதத் துவேஷமாகவும், வகுப்பு வாதமாகவும், பிறர் மீது வேண்டுமென்றே சுமத்தப் படும் பழியாகவும் தானே கருத்தழிந்தோரால் கருதப் படுகின்ற து. | எனவேதான், இந்தக் "குற்றம்" நம்மீது சுமத்தப் படுவதற்கு முன்னர், "இதிலும் இவர்கள் தான் தலை யிடுகிறார்கள் என்ற பழி நம்மீது சாட்டப்படுவதற்கு முன்னர், வேறொரு திசையில் இருந்து இந்தக் குற்றச் சாட்டுக் கிளம்பி இருக்கிறது. நாம் செய்யவேண்டிய பணி , நம்மை நாத்திகர் என்று சதா தூற்றிக்கொண் டிருக்கும் திசையில் இருந்து கிழம்பி வேல செய்வது கண்டு களிப்படைகிறோம் - நம்முடைய பிரசாரம், நாம் எதிர்பாராத திசைகளிலும் புகுந்து, நம்முடைய பணி யில் பங்கெடுக்கும் பண்பு பெற்ற நிலைகண்டு பூரிப்படை கிறோம் - நாம், நாட்டு மக்களுக்கு நல்லதென்று செய் யும் ஒவ்வொரு காரியங்களும் நம்மை நிந்திப்பவர்களா லேயே வரவேற்கப் படுவது கண்டு மகிழ்கிறோம். வருஷந்தோறும் அநேக இந்துக்கள் இன்னும் மதம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். மடாதிபதி களால் அதையெல்லாம் தடுத்து மதத்தைப் பலப் படுத்த முடியவில்லை இந்து மதத்தின் வளர்ச்சிக்காக அரசர்களாலும், பெருஞ் செல்வர்களாலும், மடங்களுக்குச் சொத்துக்கள் கொடுக்கப்பட்டன என்று கூறப்படுவதையும், மேலே உள்ள வாசகத்தையும் ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டு கிறோம் இந்த வாசகத்தைக் கூறியவர் யார்? மதத்துவே ஷிகள்' என்ற பழிச்சொல்லுக்குக் காரணமின்றி ஆளாகி இருக்கும் நாமா இதைக் கூறினோம்? இல்லை, இல்லை, நம்மை மதத்துவேஷிகள் என்று மனமறிந்த பொய் கூறும் ஏடுகளில் ஒன்றுதான் இந்த உண்மையை வெளி யிட்டிருக்கிறது. 25-1- 49-ல் வெளி வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/62&oldid=1033301" இலிருந்து மீள்விக்கப்பட்டது