பக்கம்:புராண மதங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



IDL. புராண - மதங்கள் 1sL - 11! ( 'தினசரி' என்ற ஏட்டில் - அதிலும் பொது மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் முறையில் எழுதப்படும் தலையங்கத்தில் தான் இவ்வாசகம் இடம் பெற்றுள்ளது. எனவே, தினசரி யை மதத் துவேஷம் செய்யும் ஏடென்றோ, நாத்திகத்தைப் பரப்பும் பத்திரிகை யென்றோ யாராவது கூற முடியுமா? ஆனால், அந்த ஏடு கூறுகிறது, மடாதிபதிகளால் மதம் பாதுகாக்கப் பட வில்லை - அழிக்கப்படுகிறது என்று. இதை நாம் கூறி யிருந்தால், இதற்குள், 'நாம் மடாதிபதிகளின் விரோதி கள்' என்று விளம்பரப் படுத்தப்பட்டு, பலரின் கண் டனத்துக்கு ஏன்? மடாதிபதிகளின் போக்கை இப் போது கண்டிக்கும் 'தினசரியின் வசைமாரிக்குக்கூட ஆளாகி இருப்போம். மடாதிபதிகளின் போக்கைக் கண்டிக்க முன்வந்த 'தினசரி ' இந்த அளவோடு நிற்கவில்லை. "இந்த மடாதிபதிகளின் அதிகாரம் குறைந்து விடுவதால் மதத்திற்கு எந்த நஷடமும் வந்துவிடப் போவதில்லை" என்று மேலும் கூறி மடாதிபதிகளின் போக்கைக் கண்டித்திருக்கிறது. மடாதிபதிகளின் அதிகாரம் குறைந்துவிடுவதால், அதாவது இப்போது மடாதிபதி கள் மேற்பார்வையில் உள்ள கோயிற் சொத்துக்களைச் சர்க்கார் எடுத்துப் பரிபாலனஞ் செய்தால் எந்த நஷ்ட மும் வந்துவிடப் போவதில்லை என்று 'தினசரி ' கூறுவதி லிருந்து பெறப்படும் உண்மை என்ன? இனியும் இந்த மடாதிபதிகள் ஆதிக்கத்தில் இந்தப் பொதுச் சொத்துக் கள் இருந்தால் நஷ்டம் தான் ஏற்படும் என்பதும், அவற்றைச் சர்க்காரே எடுத்து நடத்தினால் இலாபம் ஏற்படும் என்பதும் தானே 'தினசரியின் வாசகத்தில் அடங்கி இருக்கும் உண்மை . இதற்குத் தினசரி ' கூறும் காரணம் எவராலும் மறுக்க முடியாததாகும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/63&oldid=1033302" இலிருந்து மீள்விக்கப்பட்டது