பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


அவனிடம் சென்று பொருள் பெறுக! அவனிடம் பொருள்

பெறுபவர் பிறர் கடை வாயிலை நினைக்கவே மாட்டார்கள்.

செல்வ வளம் பெற்றுச் சிறப்புப் பெறுக.

உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின் கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது, சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து, ஈங்கு எவன் செய்தியோ? - பாண - பூண் சுமந்து, அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை, புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச் சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன், உட்பகை ஒரு திறம் பட்டெனப் புட் பகைக்கு ஏவான் ஆகலின், சாவேம் யாம் என, நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்பத் தணி பறை அறையும் அணி கொள் தேர் வழிக் கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும் உறந்தையோனே குருசில்; பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே.

திணை - அது துறை - பாணாற்றுப்படை. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

69. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

கையில் நீ மீட்டுவது யாழ், புரவலர் இன்மையால் உன்னை வாட்டுவது பசி, உன் இடுப்பில் வேற்று இழை நுழைந்து வியர்வையால் நனையப் பெற்ற கந்தல் ஆடை அதனை நீ பாதுகாத்து உடுத்துகின்றாய்.

அறக்கொள்கை இல்லாதவன் யாக்கை போலப் பொலி விழந்த வாழ்க்கையை உடைய உன் மெலிந்த சுற்றத்தினரோடு