பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

99



பெருங் கோக் கிள்ளி கேட்க, இரும் பிசிர் ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின் இன்புறு பேடை அணியத் தன் அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே.

திணை - பாடாண் திணை, துறை - இயன்மொழி கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

68. சோழன் நலங்கிள்ளி

உடும்பு உரித்ததுபோல் உன் கடும்பினர் விலா எலும்புகள் வெளியே தெரியும்படி பசித்து வருந்தி இருக்கின்றனர். அவர்தம் கடும்பசியைக் களைபவரைக் காணாமல் வழி காட்டுபவர் இல்லாமையால் வெறுத்து ஒதுங்கி வாழும் பாணனே! நீ இங்கு இருந்து என்ன செய்யப் போகிறாய்?

எம் தலைவன் சோழன் நலங்கிள்ளி அவன் சிறப்புகளைக் கூறுகிறேன்; செவி மடுப்பாயாக மெல்லியல் மகளிர்க்கு அவன் இனிமையானவன். அவர்பால் மென்மொழி பேசி அவர்களை மகிழ்விப்பான்.

பகைத் தன்மை கொண்டு வந்து அணுகினால் அவர்களை அகப்படுத்திப் புன்மையராக்கும் வன்மை உடையவன்.

அவன் காவிரி பாயும் வளம்மிக்க நாட்டை உடையவன்; அவன் நாட்டில் வீரர்கள் போர் செய்யத் தினவு கொண்டிருக் கின்றனர்.

நாட்டில் உட்பகை தீர்ந்து விட்டது; வெளிப் பக்ைகும் வாய்ப்பு இல்லாமையால் வீரர்கள் செயலின்றிக் கிடக்கின்றனர். வாழ்க்கையை வெறுத்து இருக்கின்றனர். போர்ப்பறை கேட்டு அவர்கள் கிளர்ச்சி உறுகின்றனர்.

அவன் யானைகள், கள் பருகுவார் கை நடுங்கிச் சிந்திய கள் அதனால் ஏற்படும் சேறு அதில் கால் வைத்து அகப்பட்டுக் கொண்டு அசையாமல் நிற்கின்றன. போர் முரசு அதன் பேரொலி அதனைக் கேட்கும் ஆர்வத்துடன் உற்றுக் கவனித்து வருகின்றன. அத்தகைய சிறப்பு உடையது உறந்தை நகர்; அதன் தலைவன்

இவன்.