பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


Visit Kite Tv Networks Private Limited on YouTube for more details Kite Tv Networks Private Limited


நளி இரு முந்நீர் நாவாய் ஒட்டி, வளி தொழில் ஆண்ட உரவோன் மருக! களி இயல் யானைக் கரிகால்வளவ! சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றேகலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை, மிகப் புகழ் உலகம் எய்திப் புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே.

திணை - வாகை, துறை - அரச வாகை.

சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது.

67. கோப்பெருஞ்சோழன்

அன்னச் சேவலே சோழனின் ஒளி பெற்ற முகத்தைப் போல விளங்கும் முழு நிலவு வீசும் இந்த மாலைப் பொழுதில் யாம் தனிமையில் நிற்கிறோம்.

குமரித்துறையில் அயிரை மீனை உண்டு வயிறு நிறைந்து பின் வடமலை நோக்கிச் செல்வாயாயின் இடையில் சோழ நல் நாட்டில் தங்க நேரிட்டால் உறையூர் உயர் நிலை மாடத்தில் உள்ள குறும்பு அறையில் தங்கி வாயில் மறுத்தாலும் விடாது அரண் மனைக்குள் புகுந்து எம்பெருங்கோ கிள்ளி கேட்கும்படி பிசிர் என்னும் ஊரில் வாழும் ஆந்தையின் அடியின் கீழ் தங்குபவன் நீ என்று அவனிடம் கூறினால் மாட்சிமை மிக்க நின் பெடை பூட்டிக் கொள்ள நல்ல ஆபரணங்களை உனக்குத் தருவான். நீ அவற்றைப் பெட்ை அன்னத்துக்குத் தர அது மகிழ்ச்சி அடையும்.

அன்னச் சேவல்! அன்னச் சேவல்! ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போலக் கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் மையல் மாலை, யாம் கையறுபு இணையக் குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி, வடமலைப் பெயர்குவைஆயின், இடையது சோழ நல் நாட்டுப் படினே, கோழி உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ, வாயில் விடாது கோயில் புக்கு, எம்