பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

97


மறைந்து விடுகிறது. அதுபோல் எம்.சேர அரசன் மறைவு நிகழ்ந்துவிட்டது; அவன் மார்பில் பாய்ந்த அம்பு முதுகுவழிச் சென்றது. அதனால் புறப்புண் ஏற்பட அதற்காக நாணி வடக் கிருந்து உயிர் விடத் துணிந்தான். அவன் இனி மறைந்த பிறகு எங்களுக்குப் பகலும் இருளாகும்; துன்பத்தில் ஆழ்பவராவோம்.

மண் முழா மறப்பப், பண் யாழ் மறப்ப, இருங் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்பச் சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப, உழவர் ஒதை மறப்ப, விழவும் அகலுள் ஆங்கண் சீறுர் மறப்ப, உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து, இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் புன்கண் மாலை மலை மறைந்தாங்குத் தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த புறப் புண் நாணி, மறத் தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன், ஈங்கு, நாள் போல் கழியல, ஞாயிற்றுப் பகலே.

திணை - பொதுவியல் துறை - கையறு நிலை.

சேரமான் பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது, புறப் புண் நாணி, வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.

66. சோழன் கரிகாற் பெருவளத்தான்

கடலில் காற்றை எதிர்த்துக் கலம் செலுத்திய திறலோன் வழிவந்தவன் நீ கரிகால் வளவனே! நீ போரில் உன் ஆற்றல் தோன்ற வென்றாய்;

வெண்ணிப் பறந்தலையில் உன்னோடு போர் செய்த பெருஞ்சேரலாதன் புறப்புண்ணுக்கு நாணம் கொண்டு வடக்கிருந்து உயிர் விட்டான். நீ விட்ட அம்பு அவன் மார்பைத் துளைத்து அது முகுகுவழிச் சென்றது; அதனால் அவனுக்கு ஏற்பட்டது இப்புறப்புண். நீ அடைந்த வெற்றி மிகப் பெரிது; பாராட்டத்தக்கதுதான்.

எனினும் அவன் தன் உயிரை விட்டுப் புகழ் எய்திவிட்டான்; அதனால் அவன் உன்னைவிட உயர்ந்து விட்டான். நன்மையை அவன் அடைந்து உயர்வு பெற்றான்; அதற்கு நீ துணை செய்தாய்.