பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



64. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முதுகுடுமிப் பெருவழுதி பகைப் புலத்தில் வீரர்களைச் சாய்த்து வெற்றி பெற்றிருக்கிறான். அவன் யானைகள் அவன் நடத்தும் அமரில் பகைவர்களைத் தாக்கி வீழ்த்தி உள்ளன. படுகளம் அதனைச் சுற்றிப் பருந்துகள் வட்டமிடுகின்றன. அவன் வெற்றி பெற்றுள்ளான்.

நம் வறுமை தீர அவன் வழங்குவான். இதுவரை உப்பு மில்லாமல் வெறும் நீர் கலந்த பருக்கைச் சோறு தின்று சலித்து விட்டோம். அதைவிட்டு ஒழிக்க அவனைச் சென்று பாடுவோம்.

நல்யாழையும், சிறுபறையையும் தோல்பையில் போட்டுக் கட்டி வைத்து அதைச் சுமந்து கொண்டு வளையல்கள் சில அணிந்த விறலியே! நாம் பகைப் புலத்தில் உள்ள அவனை நாடிச் செல்வோமாக.

நல் யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கிச் செல்லாமோதில் - சில் வளை விறலி!களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, விசும்பு ஆடு எருவை பசுந் தடி தடுப்பப் பகைப் புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின் குடுமிக் கோமாற் கண்டு, நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?

திணை - பாடாண் திணை, துறை - விறலியாற்றுப்படை

பாண்டியன் பல் யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.

65. சேரமான் பெருஞ்சேரலாதன்

முழவுகள் மார்ச்சனை மறந்தன. யாழ்கள் இசை எழுப்பு வதை நிறுத்தியன. உண்கலங்கள் கொழுஞ்சோறு மறந்தன. சுற்றத்தினர் கள்ளை மறந்தனர்; உழவர்கள் உழும் தொழிலை மறந்தனர். ஊர்கள் விழா எடுப்பதை நிறுத்தி விட்டனர்.

போர் மூண்டது; நிலவு நிறை நாளில் சூரியனும் சந்திரனும் நேர் எதிர் நின்றால் ஒன்று நிலை பெறுகின்றது; மற்றொன்று