பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



70. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

சீறியாழ்ப் பாணனே யாமையைக் கோத்து வைத்தது போலக் கிணையைக் கொம்பில் இயைத்து வைத்துள்ளாய்; உன் பாடல் இசையைக் கேட்க என்று என்னை அழைத்து வினவுகின்றாய்; இரவலனே!

தை மாதத்துத் தண்குளம்போல் கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வ வளம் மிக்கது அவன் அரண்மனை.

அந்த நாட்டு மக்கள் அடுப்புத் தீயைக் கண்டு உள்ளனர். சூரியனின் வெப்பத்தை அறிந்துள்ளனர். வெம்மை என்பதை அவர்கள் கண்டது இல்லை. அவன் ஆட்சியில் செம்மையைத்தான் காண்கின்றனர். அத்தகைய தலைவன் கிள்ளி வளவனின் நற்புகழைக் கேட்டு அறிந்து அதனை மதித்து இனிய நகைமொழி உடைய விறலியோடு நீ சென்றால் செல்வம் பெற்று உயர்வாய்.

விறகு வெட்டி எடுத்துவரச் செல்லும்ஆள் எதிர்பாராமல் பொன் கிடைக்க அதனைப் பெறுகிறான். அதைப் போன்றது அன்று அவன் ஈகை, பெறுவோமோ இல்லையோ என்று ஐயுறுதல் வேண்டாம்; எதிர்பாராமல் கிடைப்பது அன்று; பரிசில் பெறுவது உறுதி.

தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண! ‘கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை இனிய காண்க; இவண் தணிக’ எனக் கூறி: வினவல் ஆனா முது வாய் இரவல! தைஇத் திங்கள் தண் கயம் போலக் கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர், அடுதீ அல்லது சுடுதீ அறியாது; - இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன், கிள்ளி வளவன் நல் இசை உள்ளி, நாற்ற நாட்டத்து அறு காற் பறவை சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்