பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

103



பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல், இன் நகை விறலியொடு மென்மெல இயலிச் செல்வைஆயின், செல்வை ஆகுவை; விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் தலைப்பாடு அன்று, அவன் ஈகை; நினைக்க வேண்டா வாழ்க, அவன் தாளே!

திணையும் துறையும் அவை, அவனைக் கோவூர் கிழார் பாடியது.

71. ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்

சிங்கத்தைப் போன்று சினந்து ஊக்கமிக்கவராகத் தாக்குதற்கு வருவராயின் அவர்களைப் பொருது அவர்களை அலறத் தாக்கா விட்டால் தேரோடு அவர்களைப் புறம் காணச் செய்யவில்லை யென்றால் யான் இழிவுகள் பல அடைவேனாக.

மதிக்கும் என் அன்பு மனைவியைப் பிரிந்து தனிமை உறுபவன் ஆகுக.

நீதி அற்றவனை அறங்கூறு அவையத்து இருத்தி அவன் தவறு செய்ய யான் காரணம் ஆவேன் ஆகுக’ கொடுங்கோல் வேந்தன் என்ற நிலையை எய்துவேன் ஆகுக.

என் நண்பினர் மையல் என்னும் ஊருக்குத் தலைவனான மாவன், ஆந்தை, அந்துவஞ் சாத்தன், ஆதன் அழிசி, சினம் மிக்க இயக்கன் இவர்கள் உட்பட ஏனைய நண்பர்களோடு கலந்து உரையாடி மகிழும் வாழ்க்கையை இழப்பேன் ஆகுக.

மக்களைக் காக்கும் மிக்க உயர்குடியில் பிறந்த யான் தென்புலம் காவல் செய்வதை விட்டு வேறு பிற வன்புலம் காக்கும் பிறப்புப் பெறுவேன் ஆகுக.

மடங்கலின் சினை.இ, மடங்கா உள்ளத்து, அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து, என்னொடு பொருதும் என்ப; அவரை ஆர் அமர் அலறத் தாக்கித் தேரொடு அவர்ப் புறங்காணேன் ஆயின் - சிறந்த பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக;