பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



அறன் நிலை திரியா அன்பின் அவையத்துத் திறன் இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக’ மலி புகழ் வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் பொய்யா யாணர் மையற் கோமான்

மாவனும், மன் எயில் ஆந்தையும், உரை சால் அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும், வெஞ் சின இயக்கனும், உளப்படப் பிறரும், கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ, மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த தென் புலம் காவலின் ஒரீஇப் பிறர் வன் புலம் காவலின் மாறி யான் பிறக்கே!

திணை - காஞ்சி; துறை - வஞ்சினக் காஞ்சி. ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் பாட்டு.

72. தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

இவன் நாட்டைப் புகழ்ந்து கூறுபவர் நகைக்கத்தக்கவர் எனவும், இளையன் இவன் எனவும் என் மனம் உளையக் கூறியதோடு அமையாமல் நெடுநல் யானையும், தேரும், குதிரையும், படையமை மறவரும், உடையம் யாம் எனச் செருக்கோடு சில சொற்கள் பேசிச் சினம் தூண்டிய வேந்தரை அரிய போரில் தாக்கி முரசத்தோடு அவர்களை அகப்படுத்தவில்லையென்றால் யான் கீழ்மை உறுவேன் ஆகுக!

என் குடிமக்கள் தக்க ஆட்சியின்றி அவர்கள் மிக்க துயர் அடைந்து அலமுறுவார் ஆகுக! என்னைக் கொடியன் என்று துற்றுவாராக!

ஓங்கிய சிறப்பும் உயர்ந்த கேள்வியும் உடைய மாங்குடி மருதன் தலைவனாகப் புகழ்மிக்க புலவர்கள் என் நில எல்லையைப் பாடாது ஒழிவாராக!

என்னால் புரக்கப்படுபவர் துயரம் அடையவும், இரப் போர்க்கு ஈயவும் இயலாத வறுமையை யான் அடைவேன் ஆகுக.