பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

105



நகுதக்கனரே, நாடு மீக்கூறுநர் இளையன் இவன் என உளையக் கூறிப் ‘படு மணி இரட்டும் பா அடிப் பணைத் தாள் நெடு நல் யானையும், தேரும், மாவும், படை அமை மறவரும், உடையம் யாம் என்று உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கிச் சிறு சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை அருஞ் சமம் சிதையத் தாக்கி, முரசமொடு ஒருங்கு அகப்படேஎன் ஆயின்- பொருந்திய என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது, கொடியன் எம் இறை எனக் கண்ணி பரப்பிக் குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக! ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக, உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைக என் நிலவரை,

புரப்போர் புன்கண் கூர, இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

திணையும் துறையும் அவை, பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் பாட்டு.

73. சோழன் நலங்கிள்ளி

மெல்ல வந்து என் தாளில் விழுந்து வணங்கி ஈக என்று கூறி இரப்பாராயின் அரசு மட்டும் அன்று அவர்க்கு என் இன்னுயிரும் கொடுத்து உதவுவேன்.

இந்நிலத்து மன்னர்கள் எவரேனும் என் ஆற்றலை மதிக்காமல் என்னை இகழ்ந்து பேசுவாராயின் அவர்கள் தப்பிப் பிழைத்துச் செல்வது இயலாது. தூங்குகின்ற புலியைக் கால் தடுக்கி அதன்மீது விழும் குருடனின் நிலையைத்தான் அவர்கள் அடைவர்.

அத்தகையவனை யானை தன்கால் அகப்பட்ட மூங்கில்

அதைத் தின்ன அதனை வளைத்து முறிப்பதுபோல் வருந்தப் பொராமல் விட்டேனாயின் காதல் கொள்ளாத தீது உடைய மாதர்