பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



தம் ஒல்லா முயக்கிடை என் தார் குழைவதாக ஒழுக்கக் கேடு என்பால் விளைவது ஆகுக!

மெல்ல வந்து, என் நல் அடி பொருந்தி, ‘ஈ’ என இரக்குவர் ஆயின், சீருடை முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்; இன் உயிர் ஆயினும் கொடுக்குவென், இந் நிலத்து; ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் துஞ்சு புலி இடறிய சிதடன் போல, உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்துடைக் கழை தின் யானைக் கால் அகப்பட்ட வன் திணி நீள் முளை போலச் சென்று, அவண் வருந்தப் பொரேஎன்.ஆயின், பொருந்திய தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல் இருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!

திணையும் துறையும் அவை,

சோழன் நலங்கிள்ளி பாட்டு.

74. சேரமான் கணைக்கால் இரும்பொறை

இறந்து குழந்தை பிறந்தாலும் ஊன் பிண்டம் பிறந்தாலும் அது ஆண்மையுடையதன்று என்று வாளில் வெட்டிப் புதைப்பர். இது மறவர்தம் பண்பு ஆகும். மானம் மிக்கவர்தம் செயல் ஆகும்.

பசி அது தணிய நாயினும் கேடாக நடத்தும் பகைவர் மாட்டுத் தண்ணீர் தருக என்று கேட்டுப் பெறும் இழிதகவு நேர்ந்தது; இது தக்கது அன்று; இவ்வுலகு இத்தகைய இழிவு மேற்கொள்பவரை ஏற்காது. -

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும், “ஆள் அன்று’ என்று வாளின் தப்பார்; - தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம், மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்