பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

107



தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்மரோ, இவ் உலகத்தானே?

திணை - பொதுவியல், துறை - முதுமொழிக் காஞ்சி.

சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்

புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டுக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து,

தண்ணி தா என்று பெறாது. பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.

75. சோழன் நலங்கிள்ளி

ஆட்சி என்பது வயது மூத்தவர் மறைய அவர்கள் விட்டுச் செல்வது. இது விதி முறைப்படி கிடைக்கும் வாய்ப்பு. இதனால் பெருமைபடத் தக்கது ஏதும் இல்லை.

அது யார் கைக்கு வருகிறது என்பதைப் பொருத்துத்தான் அதற்குச் சிறப்பு உண்டாகிறது. அது மக்கள் வரிப்பொருள் பெற்று உண்டு தின்று வாழும் வாழ்வாகவே முடியும். ஆண்மை அற்ற சிறியவர் பெற்றால் அதில் எந்தச் சிறப்பும் உண்டாவது இல்லை. வீரம் அற்றவர் கைக்கு வந்தால் அது அவர்க்குச் சுமையே ஆகும்.

அமர்க்குச் சென்று எதிரிகளைத் தாக்கும் ஆற்றலும் வீரமும் உடையவன் பெறுவானாயின் அது உயர்வு பெறுகிறது. முரசு கொண்டு நல்லாட்சி புரியும் பெருநில மன்னர்க்கு அது மிகவும் எளிமையானது; சுமையாகாதது. வற்றிய குளத்தில் உலர்ந்து தக்கையாகிவிட்ட வெண்கிடை போன்றது ஆகும்.

‘மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால் தர வந்த பழ விறல் தாயம் எய்தினம்.ஆயின், எய்தினம் சிறப்பு எனக் குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச் சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே, மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடை நோன் தாள் விழுமியோன் பெறுகுவன்.ஆயின், தாழ் நீர் அறு கயமருங்கின் சிறு கோல் வெண் கிடை என்றுழ் வாடு வறல் போல, நன்றும்