பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



நொய்தால் அம்ம தானே-மை அற்று, விசும்புற ஓங்கிய வெண் குடை, முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே.

திணை - அது துறை - பொருண்மொழிக் காஞ்சி. சோழன் நலங்கிள்ள பாட்டு.

76. பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்றநெடுஞ்செழியன்

இதுவரை போர் என்றால் ஒருவனை ஒருவன்தான் எதிர்த்து வந்துள்ளான். வெற்றியும் தோல்வியும் பெற்றுள்ளனர். இதுதான் உலக இயற்கையும் ஆகும்.

தான் ஒருவனாக இருந்து பாண்டியன் நெடுஞ்செழியன் எழு வர்தம் வலிமையை அடக்கி வென்றான்; இது புதுமையது ஆகும்.

பாண்டியன் ஒருவன் அவன் பெருமையையும் தலைமையையும் சரியாக உணராதவராகி எதிர்க்க வந்தது புதுமையாக உள்ளது. இதுவரை இதுபோன்ற செய்தியைக் கேட்டதும் இல்லை; அறிந்ததும் இல்லை.

வேம்பின் ஒள்ளிய தளிரையும், உழிஞைக் கொடியையும் அணிந்தவனாய் இவ் எழுவரை எதிர்த்து அவர்களை வென்றான். ஒரு தானாக நின்று எழுவரையும் பொருது களத்தில் வெற்றி பெற்றது வியக்கத்தக்கது ஆகும். வரலாறு படைத்த செய்தியும் ஆகும.

ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை; இன்றின் ஊங்கோ கேளலம்-திரள் அரை மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர் நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து, செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி, ஒலியல் மாலையொடு, பொலியச் சூடிப் பாடு இன் தெண் கினை கறங்கக் காண்தக, நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன்