பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

109



பீடும் செம்மலும் அறியார் கூடிப் பொருதும் என்று தன்தலை வந்த புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க, ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே.

திணை - வாகை துறை - அரச வாகை. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றும் கிழார் பாடியது.

77. பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

யார் இதை எதிர்பார்த்தார்கள். நேற்றுவரை அவன் விளையாடிக் கொண்டிருந்தான். இன்று அவன் போருக்கு எழுவான் என்று யார் எதிர்பார்த்தார்கள்.

காலில் சதங்கை கட்டி இருந்தவன்; அதை நீக்கிவிட்டுக் கழலைப் புனைந்து கொண்டான்.

அழகுக்காக அவன் வளர்த்து வந்தது குடுமி முடி அதனை மழுங்கக் களைந்து வேப்பம் தளிரையும், உழைஞைக் கொடியை யும் சூடிக் கொண்டு போர்க் கோலம் செய்து கொண்டான்.

அவன் கையைக் குறுகிய வளைகள் அழகு செய்து கொண்டிருந்தன. அவற்றைத் தூக்கி எறிந்து விட்டுக் கையில் வில்லைப் பற்றிக் கொண்டான்.

தேர் ஏந்திப் போருக்குப் புறப்பட்டு இருக்கிறான். அவன் தேர் ஏறி அமர்ந்துள்ள காட்சி தனி அழகைத் தருகிறது. ஏற்றமிகு காட்சி அது.

பொலிவுமிக்க இத்தோற்றம் காண்பவரை வியக்கச் செய்கிறது. இவன் யார்? வாழ்க இவன் தலைமாலை மலர் மாலை அணிந்துள்ளான். இன்னும் ஐம்படைத் தாலியைக் களையவே இல்லை. பால் குடித்து வந்தவன் இன்று அவன் சோறு உண்ணத் தொடங்கியுள்ளான். சிறுவன் அவன் போர்க் கோலம் கொண்டுள்ளது வியக்கத்தக்கதாக உள்ளது.

அங்கங்கே எதிர்த்து மேல்வந்த புதிய போர் வீரர்களைக் கண்டு அவர்களை வியக்கவும் இல்லை; இழித்து உரைக்கவும்