பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



இல்லை. அவர்களை அழுந்தப் பற்றித் தூக்கி எறிந்து நிலத்தில் மோதித் தாக்கி வெற்றி காண்கிறான்.

இது குறித்து அவன் மகிழ்வும் கொள்ளவில்லை. அரிய செயல் இது என்று தன்னை மிகுத்துப் பேசிக் கொண்டதும் இல்லை. அடக்கம் இதுதான் அவனிடம் காண முடிகிறது.

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டுக் குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர் நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி, நெடுந் தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார் பூண்டு, தாலி களைந்தன்றும் இலனே பால் விட்டு அயினியும் இன்று அயின்றனனே, வயின்வயின் உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை வியந்தன்றும், இழிந்தன்றும், இலனே; அவரை அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழக் கவிழ்ந்து நிலம் சேர அட்டதை மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும், அதனினும் இலனே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது

78. பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

முன்பின் அறியாத புதிய வீரர்கள் வந்தவர்கள்; இவன் வீரத்தை மதியாது வீணாக வந்து எதிர்த்து அகப்பட்டுக் கொண்டனர்.

புலி குகையிலிருந்து மூரி நிமிர்ந்து புறப்பட்டு இரையைத் தேடிச் செல்வது போல எம் தலைவன் விளங்குகிறான். அவனை மதிக்காமல் போர் செய்யப் புதியவர் வந்தனர். யாம் மிக்க வலிமை உடையவர் என்று தம்மை மதித்துக் கொண்டனர். நம்மோடு போர் செய்யும் இவன் இளையன்; அறியாத சிறுவன் என்று இகழ்ந்தனர். இவனை வென்றால் கொள்ளத்தக்க பொருளும் மிகுதி என எள்ளி வந்து எதிர்த்தனர்.