பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

111



நேரில் சந்தித்தபின் இவன் ஆற்றல் முன் நிற்க மாட்டாராய் ஒடுங்கி நின்றனர்; அவர்கள் கண்கள் பொலிவு இழந்தன. நலிவு அடைந்து ஒடவும் தொடங்கினர்.

அவர்களைக் களத்திலேயே வைத்துக் கொல்லாமல் ஒடவிட்டு அவர்களைப் பின்தொடர்ந்து அவரவர்தம் தந்தையர் ஆட்சி செய்த சொந்த மண்ணில் வைத்துக் கொன்று அழித்தான். அவர்கள் மனைவியர் மனம் அழிந்து அவர்களும் உடன் உயிர் விட்டனர்.

வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாள், அணங்கு அருங் கடுந் திறல் என்னை முணங்கு நிமர்ந்து, அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து, ‘விழுமியம், பெரியம், யாமே நம்மின் பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என, எள்ளி வந்த வம்ப மள்ளர் புல்லென் கண்ணர், புறத்தில் பெயர, ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர் மாண் இழை மகளிர் நாணினர் கழியத் தந்தை தம் ஊர் ஆங்கண், தெண் கினை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

79. பாண்டியன் தலையாலங் கானத்துச்

செருவென்ற நெடுஞ்செழியன்

தன் மூதூர் வாயிலின்கண் உள்ள குளிர்ந்த குளத்தில் மூழ்கி, ஊர்ப் பொது மன்றத்தில் உள்ள வேம்பின் தளிரை மிலைந்து கொண்டு, தெளிந்த ஓசையை உடைய பறை முழங்கக் களிறு போலக் களத்துக்கு வந்துள்ளான்.

அவனை எதிர்க்கப் புதிதாக வந்த மறவர்கள் பலர்; அவர்களில் ஒரு சிலர் தப்பவும் முடியும். ஏனெனில் பகற்பொழுது சிறிதே உள்ளது. அதற்குள் அவர்கள் அனைவரையும் கொன்று முடிப்பது இயலாது.