பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி, மன்ற வேம்பின் ஒண் குழை மிலைந்து, தெண் கினை முன்னர்க் களிற்றின் இயலி, வெம் போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த வம்ப மள்ளரோ பலரே, எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே.

திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது.

80. சோழன் போரவைக் கோப் பெருநற்கிள்ளி

இனிய கள் மிகுதியாக உள்ள ஊர் ஆமூர். பெருநற் கிள்ளி அங்கே போர் செய்யும் பொது மன்றத்தில் தனிப்போர் நடத்த வந்த மல்லனை அவன் மதவலியை முருக்கி அவனோடு போர் செய்கிறான்.

ஒரு காலை மண்டியிட்டு அவன் மார்பில் மிதித்துக் கொண்டு மற்றொரு காலால் அவனை மடக்கிப் போட்டு வளைத்து அவனோடு மற்போர் செய்கிறான்.

பசித்து அதனால் மூங்கிலை வளைத்து முறிக்கும் யானையைப் போல் அவன் தலையையும் காலையும் பிடித்து வளைத்துத் தாக்கி அவனை வெல்கிறான்.

இந்த அதிசய நிகழ்ச்சி அதனை அவன் தந்தை தித்தன் காண்பானாக! அவன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தன் மகன் பேராற்றல் கண்டு வியப்பானாக. இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், மைந்துடை மல்லன் மத வலி முருக்கி, ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால் வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றேநல்கினும் நல்கான்ஆயினும், வெல் போர்ப் பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்மபசித்துப் பனை முயலும் யானை போல, இரு தலை ஒசிய எற்றிக் களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே. திணை - தும்பை, துறை - எருமை மறம். சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.