பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



சாறு தலைக்கொண்டெனப் பெண் ஈற்று உற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்றுமாதோஊர் கொள வந்த பொருநனொடு, ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே!

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

83. போரவைக் கோப்பெருநற்கிள்ளி

இவ்வூரில் இன்று மற்போர் செய்யும் காளை போன்ற தலைவனோடு யான் காதல் கொண்டுள்ளேன். அவனை அடையப் பெறாமல் மெலிந்து வருகிறேன். மெலிவு கண்டால் தாய் அறிவாள். அவள் கடிந்து கொள்வாள். அதற்காக அஞ்சுகிறேன்.

அவனை அடைந்து விடுவது என்று முடிவு கொண்டு அவனைத் தழுவச் சென்றால் இந்த அவையில் உள்ளவர் கடிந்து கொள்வர். அவர்களுக்காக அஞ்சுகிறேன்.

காதலை அடக்கிக் கொள்ளவும் முடியவில்லை; வெளிப்படுத்தித் துணிந்து யான் அவனைத் தழுவிக் கொள்ளவும் முடியவில்லை. இருவேறு உணர்வுகளுக்கு இடையே என் நெஞ்சு அலை மோதுகிறது. என்னைப்போல் இவ்வூரும் இருகூறு பட்டுள்ளது. ஒருகூறு என் தாய்; மற்றொரு கூறு இவ் அவையத்தார். அவர்களும் என்னைப் போல் வருந்துவாராக!

அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என் தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே; அடு தோள் முயங்கல் அவை நாணுவலே, என்போல் பெரு விதுப்புறுக-என்றும் ஒரு பாற் படாஅதாகி, இரு பாற் பட்ட இம் மையல் ஊரே!

திணை - கைக்கிளை துறை - பழிச்சுதல்

அவனைப் பெருங்கோழிநாய்க்கன் மகள் நக்கண்ணையார் பாடியது.