பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

115



84. போரவைக் கோப்பெரு நற்கிள்ளி

என் தலைவன் நாடிழந்த வறுமையால் புல்லிய உணவு உண்டபோதும் பெருந்தோளானே யாவான்; வலிமை குறைந்தவன் அல்லன்.

யான் அவன் புறஞ்சிறை இருந்தும் அவனை அடையப் பெறாமையினால் பசலை பாய்ந்து பொன் நிறத்தைப் பெற்றுள்ளேன்.

போரை ஏற்று என் தலைவன் போர்க்களம் புகுந்தால் கல்லென ஆரவாரம் செய்யும் விழா எடுக்கும் போர்க் களத்தில் அவனை எதிர்க்கும் மள்ளர்க்கு அவன் உமணர் வெருவும் கற்கள் நிரம்பிய துறையாவான். அவனை வெல்வது அரிது ஆகும்.

என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே; யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே; போர் எதிர்ந்து என்னை போர்க் களம் புகினே, கல்லென் பேர் ஊர் விழவுடை ஆங்கண், ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு உமணர் வெரூஉம் துறையன்னன்னே.

திணையும் துறையும் அவை,

அவனை அவர் பாடியது.

85. போரவைக் கோப்பெரு நற்கிள்ளி

என் தலைவன் கிள்ளி வளவனுக்கு இஃது சொந்த ஊர் அன்று; அவனுக்கு இது சொந்த நாடும் அன்று; இவ்வூர்க்கு அவன் புதியவன்.

அதனால் அவனை இவ்வூர் மக்கள் நன்கு அறிந்தவர் அல்லர் அவன் வெற்றி அடைவது உறுதி என்று கூறுபவர் சிலர்: வெற்றி அடைவது இயலாது என்று உரைப்பவர் சிலர். ஆளுக்கு ஒருவிதமாகப் பலரும் பலவாறாகப் பேசுகின்றனர். அதுவும் நல்லதே யாகும். அவன் பெருமை பேசப்படுகின்றது.

இதைக் கேட்டு ஆர்வ மிகுதியால் காற்சிலம்பு ஒலிக்க ஓடோடிச் சென்று என் மனையின்கண் போந்தை மரத்தின்