பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


மறைவின் இருந்து யான் இந்தப் போரினைக் காண முடிந்தது. மகத்தான வெற்றி, அவன் பெரு வெற்றி அடைந் தான். அதை யான் கண்டு மகிழ்கிறேன். தெளிவான முடிவு.

என்னைக்கு ஊர் இஃது அன்மையானும், என்னைக்கு நாடு இஃது அன்மையானும், ‘ஆடு ஆடு என்ப, ஒரு சாரோரே, ஆடு அன்று என்ப, ஒரு சாரோரே, நல்ல, பல்லோர் இரு நன் மொழியே, அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல், முழா அரைப் போந்தை பொருந்தி நின்று, யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

86. காவற்பெண்டு - தன்னிலை விளக்கம்

‘இந்தச் சிறிய வீட்டின் முற்றத்தில் தூணைப் பற்றிக்

கொண்டு'நின் மகன் எங்கே இருக்கிறான்?’ என்று வினவுகின்றாய்.

அவன் எங்கே இருப்பான் என்பதை என்னால் சுட்டிக் கூற இயலாது.

என்றாலும் இது மட்டும் என்னால் கூற முடியும். ஈன்ற வயிறு இது புலி சேர்ந்து வதிந்த கற்குகை இது. இதுவே அவனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு. அவனைப் போர்க்களத்தில் காணலாம்.

சிற்றில் நல் தூண் பற்றி, நின் மகன்

யாண்டு உள்னோ? என வினவுதி; என் மகன்

யாண்டு உளன்.ஆயினும் அறியேன், ஒரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல,

ஈன்ற வயிறோ இதுவே:

தோன்றுவன்மாதோ, போர்க்களத்தானே!

திணை - வாகை துறை - ஏறாண் முல்லை.

காவற்பெண்டின் பாட்டு.