பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

117



87. அதியமான் நெடுமான் அஞ்சி

பகைவர்களே களத்தில் புகுவதைத் தவிருங்கள்.

போரை ஏற்க எங்களிடத்து ஒப்பற்ற வீரன் ஒருவன் உளன்.

எட்டுத் தேர்களைச் செய்யும் ஆற்றல்மிக்க தச்சன் ஒருவன் ஒரு திங்கள் பொழுதில் ஒரே ஒரு சக்கரத்தைச் செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தேர்க்கால் எத்தகைய வலிமை யோடு கூடியது? அத்தகைய வலிமை உடையவன் அவன், உரம் கொண்ட நெஞ்சும், வலிமை மிக்க தோளும் உடையவன் அவன். அவனை எதிர்த்து வீணாக மாளப் போகிறீர். போர்க் களம் புகுதல் தவிர்வீராக.

களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து, எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல் எண் தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் அன்னோனே.

திணை - தும்பை, துறை - தானை மறம்.

அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

88. அதியமான் நெடுமான் அஞ்சி

நீவிர் யாராக இருந்தாலும் சரி; முன்னணிப் படையும் விரைந்து போர் செய்யும் தூசிப் படையும் கொண்டு போர் செய்யலாம் என்று தவறாக முடிவு செய்யாதீர்கள்.

மிக்க வலிமையினையும், நெடிய வேலினையும் தாங்கிய மழவர் குடிமகன்; போரில் வெற்றிகண்ட மாவீரன்; முழவு போன்ற தோளை உடையவன்; அத்தகைய என் தலைவனைக் காணாதவரை நீவிர் உம் படை வலிமை பற்றிப் பேசித் தருக்குக் கொண்டிருக்கலாம் இனி அதனைத் தவிர்வீர் ஆக!

தனியொருவனாகவே உங்களைக் களத்தில் சந்திக்கும் ஆற்றல் அவன்பால் உள்ளது.

யாவிர்ஆயினும், கூழை தார் கொண்டு

யாம் பொருதும் என்றல் ஒம்புமின்-ஒங்கு திறல்