பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன், கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் விழவு மேம்பட்ட நல் போர் முழவுத் தோள் என்னையைக் காணா ஊங்கே

திணையும் துறையும் அவை,

அவனை அவர் பாடியது.

89. அதியமான் நெடுமான் அஞ்சி

அழகும் பொலிவும்மிக்க விறலியே! உம் நாட்டில் என்னை எதிர்க்கத் தக்க வீரரும் உளரோ என்று அறியாமல் வினாவும் படைமிக்க வேந்தனே! உன் அறியாமையைக் கண்டு வருந்துகிறேன். எரிகோலுக்கு அஞ்சாத அரவுபோல எதிர்த்துப் போரிடும் இளம் வீரர்கள் பலர் உள்ளனர்.

அது மட்டும் அன்று; பொது மன்றத்தில் மரத்தில் தொங்கவிட்டு இருக்கும் பறை காற்றுக்குக் கிளை அசைந்து ஒலி செய்தாலும் அதுகூடப் போர் அழைப்பு என்று கருதி எழும் என் தலைவனும் உள்ளான். அதியன் அவன் பெரு வீரன் ஆவான்.

இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல், மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி! பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு? என, வினவல் ஆனாப் பொருபடை வேந்தே எறி கோல் அஞ்சா அரவின் அன்ன சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று, பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின், ‘அது போர் என்னும் என்னையும் உளனே. திணையும் துறையும் அவை,

அவனை அவா பாடியது.

90. அதியமான் நெடுமான் அஞ்சி

காந்தள்யூ மிக்கு உள்ள மலைச்சாரலில் மறப்புலி சீறி எழுந்தால் அதன் முன் நிற்கும் மான் கூட்டம் உள்ளதா?