பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

119


ஞாயிறு சீறி எழுந்தால் அதன் முன் திசைகள் எல்லாம்

செறிந்த இருள் ஆயினும் நிற்காது.

உப்பு வணிகர் செலுத்தும் வண்டியை இழுத்துச் செல்லும்

மிடுக்கான எருதுக்கு இதுதான் துறை என்று வகுப்பது உண்டோ? எத்தகையது ஆயினும் அதற்கு அது ஒரு தடை அன்று. எதிர்ப்பு அதற்கு ஒரு பொருட்டு அன்று.

கணைய மரத்தை ஒத்து விளங்கும் வலிமைமிக்க கைகளை உடைய மழவர் தம் தலைவனே அதியர்கோனே!

நின் மண்ணை மிதித்து உன்னை எதிர்க்கத் துணியும் வீரரும் உள்ளனரோ? நீ களம் புகுவதால் உன்னை யாரும் எதிர்த்து நிற்க இயலாது.

உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் அடை மல்கு குளவியொடு கமழும் சாரல், மறப் புலி உடலின், மான் கணம் உளவோ? மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? அச்சொடு தாக்கிப் பார் உற்று இயங்கிய பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய, வரி மணல் ளுெமரக் கல் பக, நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை வழு இல் வன் கை, மழவர் பெரும! இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும் பொருநரும் உளரோ, நீ களம் புகினே?

திணையும் துறையும் அவை,

அவனை அவா பாடியது.

91. அதியமான் நெடுமான் அஞ்சி

பகைவர் களம் பல கடந்து வெற்றி கொண்ட வேந்தே| அதியர் தலைவனே! பால்போன்ற பிறையை நெற்றியில் அணிந்துள்ளவன்; நீல நிறத்து மிடற்றினை உடையவன்