பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



சிவபெருமான் நஞ்சு உண்டு தேவர்களைக் காத்தவன்; அவனைப் போல் நீ நிலைத்து இருப்பாயாக!

நெடுமலை உச்சியின் பிளவுகளில் கிடைத்த அரிய நெல்லிக்கனியை அதன் பெருமையை மறைத்து வைத்து எனக்குத் தந்தாய். அது உண்டால் நீண்ட நாள் வாழ முடியும் என்ற உண்மையை மறைத்து எனக்குத் தந்தாய். இது மதிக்கத்தக்க செயல் ஆகும்.

வலம் படுவாய் வாள் ஏந்தி,ஒன்னார் களம் படக் கடந்த கழல் தொடித் தடக் கை, ஆர் கலி நறவின், அதியர் கோமான் போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி! பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக- பெரும நீயே! தொல் நிலைப் பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது, ஆதல் நின் அகத்து அடக்கிச் சாதல் நீங்க, எமக்கு எத்தனையே!

திணை - பாடாண் திணை, துறை - வாழ்த்தியல்,

அவனை அவர் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.

92. அதியமான் நெடுமான் அஞ்சி

குழந்தையின் மழலைச் சொல் யாழ் போன்று இனிதாக இசைப்பதும் இல்லை; தாள வரையறை கொண்டதும் அன்று; பொருளும் நன்கு புலப்படுவது இல்லை. என்றாலும் அதன் தந்தைக்கு அது சுவைக்கிறது; இனிக்கிறது; நெகிழ வைக்கிறது.

அதைப் போன்றவைதான் என் வாய்ச் சொற்களும்.

பகைவர்கள் மதிலைக் கடந்து வெற்றிகள் பல கண்டாய்; நெடுமான் அஞ்சி நீ என் சொற்களைக் கேட்டு எனக்கு அருள் செய்வதும் அத்தகையதே.

யாழொடும் கொள்ள பொழுதொடும் புணரா; பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு