பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

121



அருள் வந்தனவால்,புதல்வர்தம் மழலை: என் வாய்ச் சொல்லும் அன்ன - ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி! நீ அருளன்மாறே.

திணை - அது துறை - இயன்மொழி,

அவனை அவர் பாடியது.

93. அதியமான் நெடுமான் அஞ்சி

நீ நடத்திய போரில் உன்னை எதிர்த்த அரசர்கள் களத்தில் பட்டு உயிர் இழந்தனர். நீயும் மார்பில் விழுப்புண் பட்டு வீரச் செயல் விளைவித்தாய். வாழ்க நீ!

அவ்வாறு அவர்கள் உன்னால் வீரமரணம் அடையவில்லை என்றால் அவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருக்காது.

உன் தூசிப் படைக்கு ஆற்றாது அவர்கள் ஒடிச் சென்று உயிர் பிழைத்திருக்கலாம். அவர்கள் இறுதிக் காலத்தில் இயற்கை மரணம் அடைந்திருப்பார்கள்.

அவ்வாறு களத்தில் மடியாத வீரர்களை மறையவர் சடங்குப்படி வாளால் இருகூறு படுத்தி அவர்களைச் சவ அடக்கம் செய்திருப்பர். அந்த இழிவினின்று காத்து எதிர்த்த அனைவரையும் கொன்று முடித்தாய்; உயர்வு அளித்தாய்.

இனி உன்னைப் போர்க்களத்தில் எதிர்ப்பவரே யாரும் இல்லை. அதனால் போர் செய்வதற்கே இனி வாய்ப்பும் இல்லை. யானைகள் பலபட நீ பொருது விழுப்புண்பட்டுப் பெருமை பெற்றுள்ளாய். வீரம் மிக்க உன் போர்த்திறனை வியக்கிறேன். பாராட்டுகிறேன். வாழ்க நீ!

திண் பிணி முரசம் இழுமென முழங்கச் சென்று, அமர் கடத்தல் யாவது? - வந்தோர் தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு, ஒடல் மரீஇய பீடு இல் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதல் மறந்து, அவர் தீது மருங்கு அறுமார்,