பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி ‘மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க’ என வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர்மாதோவரி Dமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து அண்ணல் யானை அடு களத்து ஒழிய, அருஞ் சமம் ததைய நூறி, நீ, பெருந் தகை விழுப் புண் பட்ட மாறே.

திணை - வாகை துறை - அரச வாகை,

அவன் பொருது புண்பட்டு நின்றோனை அவர் பாடியது.

94. அதியமான் நெடுமான் அஞ்சி

ஊர்ச் சிறுவர்கள் யானையின் வெண்கோட்டினைக் கழுவு கின்றனர். அவர்கள்பால் அது இனிமையாக நடந்து கொள்கிறது.

அதைப் போலப் புலவர்களாகிய எம்மிடத்து நீ அன்பு காட்டுகிறாய். இனியனாக விளங்குகிறாய்.

அதே யானை மதம் பட்டு விட்டால் அது கொடிது ஆகிறது. யாரையும் அது அணுக விடாது. அதுபோல் பகைவர்களுக்கு நீ கொடியவனாய் அமைகிறாய். அவர்கள் உன்னை அணுக இயலாது.

ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின், நீர்த் துறை படியும் பெருங் களிறு போல இனியை, பெரும! எமக்கே மற்று அதன் துன் அருங் கடாஅம் போல இன்னாய், பெரும நின் ஒன்னாதோர்க்கே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

95. அதியமான் நெடுமான் அஞ்சி

இங்கே போர்ப் படைக் கருவிகளை அழகாக அடுக்கி வைத்திருக்கிறாய். மயிற்பீலி சார்த்தி அவற்றை அழகுபடுத்தி யுள்ளாய். மாலை சார்த்தி வழிபாடு செய்ய வைத்திருக்கிறாய்.