பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

125



அவனோடு மாறுபட்டவர் உய்வது எங்ஙனம்? உயிர் பிழைப்பது அரிது.

நீவிர் உம் பழைய ஊர்களைக் காத்தல் வேண்டின் அவனுக்குத் திறை தந்து இறையாண்மையைக் காத்துக் கொள்வீர். அவ்வாறு திறை தர மறுத்தால் நீங்கள் உயிர் தப்புவது இயலாது;

யான் இவ்வளவு சொல்லியும் தெளிவுபட நடந்து கொள்ளர் ஆயின், உம் மனைவியர் தோளைத் துறப்பது உறுதி. இஃது அறிந்து நடந்து கொள்வீராக.

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே; வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர் நறுங் கள்ளின் நாடு நைத்தலின், சுரை தழிஇய இருங் காழொடு மடை கலங்கி நிலை திரிந்தனவே; களிறே, எழுஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர் குழுஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே; மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர் பொலம் பைந் தார் கெடப் பரிதலின், களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே, அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப் பொலந் தும்பைக் கழல் பாண்டில் கணை பொருத துளைத் தோலன்னே. ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது? தடந்தாள், பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர் நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு இறுக்கல் வேண்டும் திறையே, மறுப்பின், ஒல்வான்அல்லன், வெல்போரான் எனச் சொல்லவும் தேறீர்ஆயின், மெல் இயல், கழற் கனி வகுத்த துணைச் சில்ஒதிக், குறுந் தொடி மகளிர் தோள் விடல் இறும்பூது அன்று. அஃது அறிந்து ஆடுமினே.

திணையும் துறையும் அவை. அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.