பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


98. அதியமான் நெடுமான் அஞ்சி

உன் போர்யானைகளைக் கண்டு அவை மதில்களைத் தாக்கும் என்பது அறிந்து முன் காப்பாகப் பகைவர்கள் கதவுகளுக்குக் கணையம் இடுகின்றனர்.

உன் குதிரைகள் வருதலைக் கண்டு முட்களைக் கொண்டு நுழை வாயில்களை அடைக்கின்றனர்.

நின் உறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட வேல்களைக் கண்டு அவர்கள் தம் கேடயங்களைச் சீர் செய்து கொள்கின்றனர்; அவற்றிற்குப் பிடியும் பூணும் இடுகின்றனர்.

வலிமைமிக்க உன் படை வீரர்களைக் கண்டு எதிர்க்க மாட்டாமல் தம் குருதிபட்ட அம்புகளைத் தூணியில் இட்டுச் செறித்துக் கொள்கின்றனர். அவர்கள் ஒடுங்கி எதிர்க்க அஞ்சுகின்றனர். -

ஐயவி புகைத்தும் தடுக்க முடியாக் கூற்றம் போல் அவர்களுக்கு நீ தோற்றம் அளிக்கிறாய்

பகைவர்கள் இரங்கத் தக்கவர்; சோலைகளும், வயல்களும் உடைய அவர்கள் நாடு இனி அழியத்தான் போகிறது.

முனைத் தெவ்வர் முரண் அவியப் பொரக் குறுகிய நூதி மருப்பின் நின் இனக் களிறு செலக் கண்டவர் மதிற்கதவம் எழுச் செல்லவும், பிணன் அழுங்கக் களன் உழக்கிச் செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் இன நல் மாச் செலக் கண்டவர் கவை முள்ளின் புழை அடைப்பவும், மார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் தோல் கழியொடு பிடி செறிப்பவும், வாள் வாய்த்த வடுப் பரந்த நின் மற மைந்தர் மைந்து கண்டவர் புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது. ஒய்யென,