பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

127



உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் கூற்றத்து அணையை ஆகலின், போற்றார் இரங்க விளிவதுகொல்லோ - வரம்பு அணைந்து இறங்குகதிர் அலம்வரு கழனிப் பெரும் புனற் படப்பை, அவர் அகன் தலை நாடே!

திணை - வாகை துறை - அரச வாகை, திணை - வஞ்சியும், துறை - கொற்ற வள்ளையும் ஆம்

அவனை அவர் பாடியது.

99. அதியமான் நெடுமான் அஞ்சி

அமரர்களைப் போற்றியும், வணங்கியும், அவர்களுக்கு ஆகுதி தந்தும், அங்கு இருந்து கரும்பு இங்குக் கொண்டு வந்து சேர்ததும் சிறப்புகளைப் பெற்று இம்மண்ணுலகை உன் முன்னோர் ஆண்டனர். அவர்கள் புகழுடன் ஆட்சி செய்தனர்.

அவர்களைப் போல நீயும் உன் முன்னோர்கள் விட்டு வைத்த அரசு உரிமையைப் பெற்றுச் சிறப்புற ஆள்கின்றாய். ஏழு இலச்சினை உடைய அரசு உரிமையை நீ பெற்றுள்ளாய்.

அப்படி இருந்தும் மன நிறைவு கொள்ளாமல் நீ எழுவரொடு மலைந்து உன் ஆற்றலை வெளிப்படுத்தினாய். நீ புலவர் பாடுதற்கு அரியை ஆயினாய்.

நீ உன்னோடு மாறுபட்ட கோவலூர் அரசனை அழித்து வெற்றி பெற்ற சிறப்பைப் பரணர் பாடினர். அது சிறப்புத் தருகிறது.

அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும், நீர் அக இருக்கை ஆழி சூட்டிய தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல, ஈகை அம் கழற் கால், இரும் பனம் புடையல், பூ ஆர் காவின், புனிற்றுப் புலால் நெடு வேல், எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம் வழு இன்று எய்தியும் அமையாய்ச் செரு வேட்டு, இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச்