பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

129


101. அதியமான் நெடுமான் அஞ்சி

ஒரு நாள் மட்டும் யாம் அவனிடம் செல்லவில்லை. பல நாள் பலரோடு சென்றாலும் முதல் நாளைப் போலவே என்றும் விருப்பத்தோடு எங்களை வரவேற்றான்.

அழகிய, பூண் அணிந்த யானையையும், புனைவு பெற்ற தேரையும் உடையவன் அதியமான். அவனிடம் பரிசு பெறுவதில் காலம் நீட்டித்தாலும் நீட்டிக்கலாம். ஆனால், பரிசு பெறுவது உறுதி; யானை தன் கொம்பிடை வைத்த கவளம் அதன் வாயில் செல்வது தப்பாது, அதுபோன்றது அவன் தரும் பரிசில்.

அவனிடம் பரிசு பெற விழைந்த நெஞ்சமே வருந்தற்க! அவன்தாள் வாழ்வதாக!

ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்; பல நாள் பயின்று, பலரொடு செல்லினும், தலை நாள் போன்ற விருப்பினன்மாதோஇழை அணி யானை இயல் தேர் அஞ்சி அதியமான்; பரிசில் பெறுஉம் காலம் நீட்டினும், நீட்டாது.ஆயினும், களிறு தன் கோட்டு இடை வைத்த கவளம் போலக் கையகத்தது; அது பொய் ஆகாதே; அருந்த ஏமாந்த நெஞ்சம்! வருந்த வேண்டா, வாழ்க, அவன் தாளே!

திணை - பாடாண் திணை, துறை - பரிசில் கடாநிலை.

அவனை அவர் பாடியது.

102. அதியமான் பொகுட்டு எழினி (அதியன் மகன்)

எருதுகள் இளையவை; புதியவை; இதற்குமுன் அவற்றைப் பூட்டியதும் இல்லை. அவை பூட்டப்பட்ட வண்டியில் பண்டச் சுமையோ பெரிது. வழியில் மேடு பள்ளங்கள். என்ன ஆகும் என்று கூற முடியாது. அதற்காக அவ்வண்டிக்கு உமணர் ஏற்கனவே உள்ள கீழ்மூல அச்சோடு சேம அச்சு ஒன்று உடன் சேர்த்துக் கட்டி எடுத்துச் செல்வர்.