பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


சேம அச்சு போல் ஆபத்துக் காலத்தில் அரும்பொருள் கொடுத்து உதவும் உயர்வு உன்பால் உள்ளது. ஈகையில் மிக்கோன்; புகழ்மிக்கவன் நீ முழுநிலவைப் போல் நிறைகுணம் படைத் தவன் நீ உன் நிழலில் வாழ்வோர்க்கு யாது குறை உள்ளது?

‘எருதே இளைய நுகம் உணராவே, சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே: அவல் இழியினும், மிசை ஏறினும், அவனது அறியுநர் யார்?’ என, உமணர் கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன, இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள் நாள் நிறை மதியத்து அனையை, இருள் யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே? திணை - அது துறை - இயன்மொழி. அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது

103. அதியமான் நெடுமான் அஞ்சி

காவடியில் ஒரு பக்கம் பதலை என்னும் பறை; மற்றொரு பக்கம் சிறுமுழவு. இவை தொங்க விட்டுச் செல்கிறாய் நீ.

உணவுக் கலன் அது வெறுமை உற்றுக் கவிழ்க்கப்பட்டு உள்ளது. அதை நிரப்புவார் யார் என்று கவலையுடன் வினவுகின்றாய்.

சுரத்தில் செல்லும் விறலியே! நீ செல்வதாக இருந்தால் அவன் சேய்மையில் உள்ளவன் அல்லன்.

அவன் போர்முனையில் எதிரிகளின் ஊர்களை எரியிட்டுக் கொளுத்திக் கொண்டிருக்கிறான். அதில் எழும் புகை மலையைத் தழுவும் மேகம் போல இளங்களிறுகளைச் சூழ்கிறது. ஈரம் புலராத உன் உணவுப் பாத்திரத்தில் அவன் மெழுகு அடைபோல நிணம் மிக்க கொழுமையான சோறு தருவான்.

உலகமே வறுமை உற்றாலும் அவன் தருவதில் வெறுமை காட்டமாட்டான். அவன் தாள் வாழ்க!