பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

131



ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத் தூம்பு அகச் சிறு முழாத் துங்கத் தூக்கிக் ‘கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?’ எனச் சுரன்முதல் இருந்த சில் வளை விறலி! செல்வைஆயின், சேணோன் அல்லன்;

முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும் பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி; பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப, அலத்தற் காலை ஆயினும், புரத்தல் வல்லன் வாழ்க, அவன் தாளே!

திணை - அது துறை - விறலியாற்றுப்படை அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.

104. அதியமான் நெடுமான் அஞ்சி

மறம்மிக்க பகை வீரர்களே! யாம் கூறுவதைச் சற்றுக் கேட்டு மதித்து நடந்து கொள்ளுங்கள். இது உமக்கு நன்மை தரும்.

ஊர்ப் பிள்ளைகள் நீராடும் நீர்த்துறை கால் அளவுதான். அதில் உள்ள முதலை வலிமைமிக்க யானைகளை ஈர்த்து அழிக்கும். தோற்றத்தில் அது சிறியதுதான். ஏற்றம் உடைய யானையை இழுத்து அதனைக் கொல்லும் ஆற்றல் அதன்பால் உள்ளது.

எம் தலைவன் வயதில் இளையவன்தான். அவன்பால் அடங்கி உள்ள நுண்மையான ஆற்றல் வெளியே புலப்படாது. அதனை அறிந்து கொள்ளாமல் இளையன் அவன் என்று உளைய அவனோடு போர் தொடுப்பீராயின் அவனை அடுதல் இயலாது; வெற்றி பெற இயலாது.

போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை: ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும் தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை