பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



நுண் பல் கருமம் நினையாது, ‘இளையன் என்று இகழின், பெறல் அரிது. ஆடே.

திணை - வாகை துறை - அரச வாகை.

அவனை அவர் பாடியது.

105. வேள்பாரி

அழகு மிக்க விறலியே பரந்துபட்ட நிலத்தில் குவளைகளில் இதழ்களில் நீர்த்துளி கலக்க மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் அவன் மலையுச்சிகளில் இருந்து அருவிநீர் விழுகின்றது. அது கொள் பயிரிடும் நிலத்திற்குப் பாய்கிறது; கால்வாயாக ஒடுகிறது.

அந்த மலை வீழ் அருவியைப் போல் இனிமையும், மென்மையும், நன்மையும் உடையவன் வேள்பாரி. அவன்பால் சென்றால் பொன் ஆபரணம் பெறுவாய்.

சேயிழை பெறுகுவை- வாள் நுதல் விறலி! தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப் பெய்யினும், பெய்யாது.ஆயினும், அருவி கொள் உழு வியன் புலத்துழை கால் ஆக, மால்புடை நெடு வரைக் கோடுதோறு இழிதரும் நீரினும் இனிய சாயற் பாரி வேள்பால் பாடினை செலினே.

திணை - பாடாண் திணை, துறை - விறலியாற்றுப்படை.

வேள் பாரியைக் கபிலர் பாடியது.

106. வேள்பாரி

மெல்லிய இலைகளை உடையது; குவிந்து கொத்துக் கொத் தாகக் கிடப்பது எருக்கம்பூ, அவற்றை நல்லன என்றோ தீயவை என்றோ கொள்வது இல்லை. ஏதோ அவனுக்குக் கிடைத்தது அதுதான். அதைக் கொண்டு வருகிறான் தெய்வ வழிபாட்டுக்கு.

அம்மலரினை இட்டு அவன் வழிபடுகிறான் என்றால் அத்தெய்வம் அவனைப் பார்த்து எதற்கும் உதவாத இவ் எருக்க