பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

133


மாலைதான் உனக்குக் கிடைத்ததா என்று அவனைத் தள்ளி

விடுவது இல்லை.

அவன் எதைக் கொண்டு வருகிறான் என்பது பெரிது அன்று; அவன் வழிபாடுதான் மதிக்கத்தக்கது. அதைத் தெய்வம் ஏற்றுக் கொள்கிறது. அவனுக்கு அருளவும் செய்கிறது.

அதைப் போலத்தான் வேள்பாரியும்; தன்னை நாடி வருபவர் அறிவு குறைந்தவர் ஆயினும் பண்பு குறைந்தவர் ஆயினும், அவர்களை ஒதுக்குவது இல்லை; அவர்கள் ஆற்றல் அற்றவர் என்பதால் அவர்களை அகற்றுவது இல்லை; போற்றுவார் யாவராயினும் அவர்களை மதித்துப் பரிசில்கள் தந்து அவர்கள் குறைகளை நீக்குவான். அவன் கை வண்மை நிலைத்து இருப்பது ஆகும்.

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புல்இலை எருக்கம்ஆயினும், உடையவை

கடவுள் பேணேம் என்னா, ஆங்கு

மடவர் மெல்லியர் செல்லினும்,

கடவன், பாரி கை வண்மையே.

திணை - அது துறை - இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

107. வேள் பாரி

புலமைமிக்க இப்புலவர்கள் ஈவதற்குப் பாரிதான் உளன் என்று பலமுறை கூறி வருகின்றனர். அவனையே ஏத்திப் புகழ்கின்றனர்.

அவன் தானா வாரி வழங்குகிறான்? அவனைத் தவிர வேறு யாருமே இல்லையா?

வான்மழை வாரிவழங்குகிறது. இந்த உலகத்தைக் காக்கிறது; உயிர்வாழ வைக்கிறது.

மழையும் பாரிபோல் வழங்குகிறது. இதைப் புலவர்கள் அறிய வேண்டும்.

இனி அவனைப் பாடுவது என்றால் மழையைப் போல் அவன் வழங்குகிறான் என்று உவமை கொடுத்துக் கூறுவதே தக்கது ஆகும்.