பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



‘பாரி பாரி என்று பல ஏத்தி, ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன், மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே. திணையும் துறையும் அவை,

அவனை அவர் பாடியது.

108. வேள் பாரி

குறமகள் அடுப்பு எரிக்கும் கொள்ளிக் கட்டை சந்தனம் ஆதலின் அதன் நறுமணம் அடுத்து விளங்கும் மலைச்சாரலில் உள்ள வேங்கைப் பூங்கொம்பில் படருகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க பறம்பு நாட்டைப் பரிசிலர் கேட்டால் அவர்களுக்கு மறுக்காமல் தருவான். அப்பறம்பு தன்னிடம் இல்லை என்றால் தன்னையே அளிக்க முன்வருவான். அவர் பின் வாரேன் என்று மறுத்துக் கூறான். அறக்கொள்கை பூண்டவன், ஈகை மிக்கவன்; எதையும் தரும் மன இயல்பு படைத்தவன்.

குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி ஆரம்ஆதலின், அம் புகை அயுலது சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும் பறம்பு பாடினரதுவே, அறம் பூண்டு, பாரியும், பரிசிலர் இரப்பின், ‘வாரேன் என்னான், அவர் வரையன்னே.

திணையும் துறையும் அவை,

அவனை அவர் பாடியது.

109. வேள் பாரி

முரசினை உடைய மூன்று பேரரசர்களும் முற்றுகை இட்டுள்ளீர்கள். பாரியின் பறம்பு உங்கள் முற்றுகையால் உணவு இல்லாமல் வருந்துகிறது. அது உண்மைதான்; உங்கள் முற்றுகை யால் அவன் பணிந்துவிடுவான் என்று கருதற்க.