பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

135


பாரியின் பறம்பு தன் நிறைவு கொண்டது; உழவுத் தொழி

லைத்தான் நம்பி வாழ வேண்டும் என்பது இல்லை. உழவர்

உழாமலேயே நான்கு விளைவுகள் அம்மலையில் உள்ளன.

ஒன்று சிறிய இலையுடைய மூங்கிலில் நெல் விளைகிறது. அடுத்து பலா மரங்கள் வேண்டிய அளவு தீஞ்சுளைகளைத் தருகின்றன. அடுத்து வள்ளிக் கிழங்கு வேண்டியது கிடைக்கிறது; அடுத்தது அவன் நெடிய குன்றம் தேன் சொரிகிறது.

வான் அளாவியது அவன் மலையே; வானத்து மீன்களைப் போன்றவை அதன்கண் உள்ள சுனைகள்; அங்கு மரந்தொறும் யானைகளைக் கட்டி வைத்தீர் ஆயினும்; இடம்தோறும் தேர்களைப் பரப்பி நிறுத்தினர் என்றாலும் போர் செய்து அவன் குன்றைப் பெற இயலாது.

யான் அறிகுவன் அதனைப் பெறும் வழி. வடித்து முறுக்கப்பட்ட நரம்பினை உடைய சிறிய யாழை இசைத்து மணம் மிக்க கூந்தலை உடைய தும் விறலியர் பின்வர ஆடியும் பாடியும் சென்றால் நாடும் குன்றும் சேர்த்துத் தருவான்.

அளிதோதானே, பாரியது பறம்பேநளி கொள் முரசின் மூவிரும் முற்றினும், உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே; மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே; நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து, திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே, வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து, மீன் கண் அற்று, அதன் சுனையே ஆங்கு, மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் தாளின் கொள்ளலிர், வாளின் தாரலன்; யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே: சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர, ஆடினிர் பாடினிர் செலினே, நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே.

திணை - நொச்சி; துறை - மகள் மறுத்தல். அவனை அவர் பாடியது.