பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



110. வேள் பாரி

பறம்பினை முற்றுகையிடுவதே உங்கள் முயற்சியாக

உள்ளது. படைகள் பல கொண்டு மூவர் நீவிர் ஒருங்கு கூடி வந்து போர் செய்தாலும் பறம்பினை உங்களால் கொள்ள இயலாது.

பறம்பு மலை முந்நூறு ஊர்களைக் கொண்டது. அவ்வூர்கள் அனைத்தையும் பரிசிலர் பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அவை உரிமை ஆகிவிட்டன.

எஞ்சி இருப்பவன் பாரி ஒருவன் மட்டும் தான்; அவனைச் சுற்றி வாழும் புலவர்கள் ஆகிய யாமும் உள்ளோம்.

ஊர்கள் பரிசிலர்க்குத் தந்துவிட்டான். குன்று மட்டும் உள்ளது. நீர் பாடிச் சென்றால் அதனைக் கேட்டுப் பெறலாம்.

கடந்து அடு மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே’ முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு; முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றன; யாமும் பாரியும் உளமே; குன்றும் உண்டு - நீர் பாடினிர் செலினே.

திணையும் துறையும் அவை, மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை அவர் பாடியது.

111. வேள் பாரி

பெரியது: கருநிறத்தது இக்குன்று எப்படி இதை அடைவது என்று அறியாமல் போரினால் வெல்ல முயல்கின்றனர். வேந்தர் கள் ஆயினும் வேல்கொண்டு அடைவது இயலாத செயல் ஆகும். நீல மலர் போன்ற கண்களையுடைய அழகிய கிணை மகள்

பாடிச் சென்றால் அவள் அதனை எளிதிற் பெற முடியும். இரவலர்க்கு அவன் உவந்து தருவான்.

அளிதோ தானே, பேர் இருங் குன்றே! வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே'