பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

137



நீலத்து, இணை மலர் புரையும் உண்கண் கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.

திணையும் துறையும் அவை,

அவனை அவர் பாடியது.

112. வேள் பாரி

சென்ற நிலவு நாளில் எம் தந்தை எம்முடன் இருந்தார். யாம் எம் தந்தையோடு மகிழ்வுடன் இருந்தோம். எம் குன்றையும் பிறர் கொண்டிலர்.

இதோ இந்த இவ்வெண்ணிலவில் முரசு உடைய வேந்தர் மூவர் எம் குன்றினைக் கொண்டனர். எம் தந்தையும் எம்முடன் இல்லை.

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின்,

எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;

இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின்,

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

திணை - பொதுவியல் துறை - கையறுநிலை

பாரி மகளிர் பாடியது.

113. வேள் பாரி

மிக்க புகழ் உடைய பறம்பே குடிக்கும் அளவுக்கு எங்களுக்குக் கள் கிடைத்தது; ஆட்டுக் கிடாயை வீழ்த்த அதனால் இறைச்சி கிடைத்தது; துவையலும், இறைச்சியுடன் கூடிய கொழுஞ் சோறும் உண்டோம். விரும்பிய வளன் தந்து எங்களை மகிழ்வித்தாய் முன்பு.

இனியாம் செய்வது யாது? பாரி உயிர் மாய்ந்து அதனால் கலங்கிச் செயலற்று நீர் நிறைந்த கண்ணோடு உன்னைத் தொழுது வாழ்த்தி விட்டுச் செல்கிறோம். பறம்பே நீ வாழ்க.

பாரி மகளிர் இளம் பெண்கள்; இவர்களுக்குத் தக்க கணவரைத் தேடி உரியவரை நாடிச் செல்கிறோம். இது எங்கள்