பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


நிலை. உன்னைவிட்டு யாம் பிரிந்து செல்கிறோம். அதற்கு வருந்துகிறோம்.

மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும், அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும் பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி, நட்டனைமன்னோ, முன்னே; இனியே, பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று, நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச் சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பேகோல் திரள் முன் கைக் குறுந் தொடி மகளிர் நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.

திணையும் துறையும் அவை, அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது.

114. வேள் பாரி

களிறு மென்று தின்று மிச்சிலைத் தூர எறிவது போலத் தேனைப் பிழிந்து எடுத்து விட்டு அதன் சக்கையைத் துர எறிந்தாலும் அதிலிருந்து வெளிப்படும் தேன் ஒழுகி முற்றங்களை நிரப்புகிறது. தேன் மிக்கு உள்ள குன்று அவனது; முற்றத்தில் இருந்து கொண்டு நற்றேர்களை அவன் புலவர்க்கு வாரி வழங்குகிறான். அத்தகைய சிறப்புடையது அவன் குன்று.

அந்த நெடிய குன்று இங்கு இருந்து பார்த்தாலும் அழகிய காட்சி தருகிறது. சற்றுத் தொலைவில் இருந்து பார்ப்பவருக்கும் அது தெரிந்து கொண்டுதான் இருக்கிறது. எம்மை விட்டு நீங்கி மறையவே மறையாது.

ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறு வரை சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்றகளிறு மென்று இட்ட கவளம் போல, நறவுப் பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல் வார் அசும்பு ஒழுகும் முன்றில், தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.

திணையும் துறையும் அவை, அவன் மகளிரைக் கொண்டு போம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.