பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

139



115. வேள் பாரி

வேலைத் தாங்கிய வேந்தர்க்கு இனியன் அல்லாதவன்; எமக்கு இனியன் ஆகின்றான்.

அவன் குன்று ஒருபக்கம் மலையருவி விழுந்து ஒலித்துக் கொண்டு இருக்கிறது. மற்றொரு பக்கம் பாணர் கைப்பாத்திரம் நிறையும்படி உகுக்கும் கள்ளாகிய தேறல் மலைச்சாரலில் அலைத்து ஒழுகு கிறது. அருவிபோலக் கள் அலைத்து ஒழுகிய குன்று அது; அத்தகைய குன்று எம்மை விட்டுச் சென்றுவிட்டது. அது வருத்தத்தைத் தருகிறது.

ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார்

பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,

வாக்க உக்க தேக் கள் தேறல்

கல் அலைத்து ஒழுகும்மன்னே!-பல் வேல்,

அண்ணல் யானை, வேந்தர்க்கு

இன்னான் ஆகிய இனியோன் குன்றே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

116. வேள் பாரி

சோலைகளில் மயில்கள் ஆடின; முசுக்கலைகள் பாய்ந்து ஓடின, அவை பலாப்பழம் தின்று தெகுட்டு அடைந்தன; காலம் அன்றியும் மரங்கள் காய்த்துக் கனிகள் தந்தன; அத்தகைய மலைவளம் மிக்கது.

அப்பெருமை மிக்க மலையின் உச்சியில் ஏறிப் பாரி மகளிர் நின்று தம் தந்தை பாரியின் அருமையை அறியாதவராகிப் போர் செய்ய வந்த வேந்தர் தம் சேனைகளுடன் வந்த குதிரைகளை எண்ணிக் கொண்டிருந்தனர்.

இனிய நகையுடைய இவ்விளம் பெண்கள் இன்று புல் அடர்ந்த வழிகளையும், முள்ளிட்ட வேலியையும், பஞ்சுச் செடிகளையும் உடைய முற்றத்தை உடைய சிறிய தம் வீட்டில் பீரைச் சுரை படரும் சுவர்களின் பக்கங்களில் ஈச்ச இலைக் குப்பை