பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


மீது ஏறி உமணர் செலுத்தும் உப்பு வண்டிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

தேர்களை எண்ணியவர்கள் இன்று உப்பு வண்டிகளை எண்ணுகின்றனர். இத்தகைய இழிவு நிலை அடைந்தமை நினைத்து அதற்கு அழிவுறுகிறேன் யான்; என் வாழ்நாள் கெடுவதாக.

தீம் நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக் கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல், ஏந்து எழில் மழைக் கண், இன் நகை, மகளிர் புல் மூசு கவலைய முள் மிடை வேலிப் பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், பீரை நாறிய சுரை இவர் மருங்கின், ஈத்து இலைக் குப்பை ஏறி, உமணர் உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ, நோகோ யானே, தேய்கமா, காலை!பயில் பூஞ்சோலை மயில் எழுந்து ஆலவும், பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும், கலையும் கொள்ளாவாகப் பலவும் காலம் அன்றியும் மரம் பயம் பகரும் யாணர் அறாஅ வியல் மலை அற்றே அண்ணல் நெடு வரை ஏறித் தந்தை பெரிய நறவின், கூர் வேற் பாரியது அருமை அறியார், போர் எதிர்ந்து வந்த வலம் படு தானை வேந்தர் பொலம் படைக் கலி மா எண்ணுவோரே.

திணையும் துறையும் அவை,

அவனை அவர் பாடியது.

117. வேள் பாரி

வானத்தில் சனி மீன் புகைந்தாலும், திசை நான்கும் புகை தோன்றினாலும், வெள்ளி தென் திசை ஏகினும் இந்தப் பறம்பு பசுமை பெற்றே உள்ளது. வயல்களில் புதற்பூ மிக்கு மலர்கின்றது; கன்றை ஈன்ற பசு வயிறு நிறையப் புல் மேய்கிறது. புல்வெளி மிக்கு உள்ளது.