பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

141


இங்கு மழை எப்பொழுதும் பொய்த்தது இல்லை; ஆட்சிச்

செம்மை ஒரு காரணம்; சான்றோர்கள் மிக்குள்ளனர். இது

மற்றொரு காரணம். மழை வளம் மிக்க நாடு அது.

அதுமட்டுமன்று; பசுமையான இலைகளை உடைய முல்லை எப்பொழுதும் அரும்பு விட்டு அழகுபடுத்தும். வெருகுக் குட்டியின் கூரிய முள்போன்று இம்முல்லைகள் முகை விடுகின்றன. பாரியின் பறம்பு மழை வளம் மிக்கது ஆகும்.

மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும், தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், வயலகம் நிறையப் புதல் பூ மலர, மனைத்தலை மகவை ஈன்ற அமர்க் கண் ஆமா நெடு நிரை நன் புல் ஆரக் கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப் பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே.பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும் ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே.

திணையும் துறையும் அவை,

அவனை அவர் பாடியது.

118. வேள் பாரி

கூரிய வேலினைத் தாங்கியவன்; வலிமை மிக்க தோளினன்; தேரை உடையவன் பாரி வள்ளல்; அவன் நாட்டில் பாறைகளும் மலைச் சிகரங்களும் உள்ளன. அவை அந்நாட்டுக்கு அழகு தருவன. அவற்றுக்கு இடையில் சிறிய குளம் உள்ளது. பார்ப்பதற்கு அது எட்டாம் நாள் பிறைச் சந்திரனைப் போல் வளைவு கொண்டு உள்ளது. அது இனி உடைந்து பாழகிவிடுமோ! நினைக்கும்தோறும் வருத்தம் மேலிடுகிறது.

அறையும் பொறையும் மணந்த தலைய,

எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்

தெள் நீர்ச் சிறு குளம் கீள்வதுமாதோ

கூர் வேல் குவைஇய மொய்ம்பின்

தேர் வண் பாரி தண் பறம்பு நாடே!

திணையும் துறையும் அவை.

அவை அவர் பாடியது.