பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



119. வேள் பாரி

கார்காலத்து மழை பெய்ய அதனால் இப் பறம்பு மலை

காட்சிக்கு இனிதாகிறது.

களிற்று முகத்துப் புள்ளிகள் போலத் தெறுழ் பூ பூக்கிறது. செம்புற்று ஈசலைப் புளிமோரில் இட்டுப் பருகி மகிழ்வர். மென்மையான தினை புதிது புதிதாக விளைந்து வளம்

தருகிறது. அத்தகைய சிறப்பு உடையது இரவலர்க்கு ஈயும் வள்ளியோன்.ஆகிய பாரியின் பறம்பு நாடு.

நிழல் இல்லாத நீண்ட வழிப் பாதையில் பேரரசர்கள் மிக்கு இருந்தும் நிழல் தரும் தனிமரம் போல விளங்குபவன் பாரி. அவன் குளிர்ந்த வயல்களையுடைய வளம் மிக்க நாடு இனிப் பாழாகி அழியுமோ வருத்தம் மேலிடுகிறது.

கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலை, களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்பச் செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து: மென் தினை யாணர்த்து நந்தும் கொல்லோநிழல் இல் நீள் இடைத் தனி மரம் போலப் பணை கெழு வேந்தரை இறந்தும் இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

120. வேள் பாரி

வேங்கை மரத்தை உடைய மேட்டு நிலத்தில் கார் காலத்து மழை பெய்வதால் ஈரம் படிகிறது. அங்கு வரகுக் கதிர்கள் மிக்குக் காய்க்கின்றன. அவற்றை அரிவர்; தினையைக் கொய்து ஒன்று சேர்ப்பர். எள் கறுத்துக் காய்க்க அவை உதிர்கின்றன. அவரைக் காய் விளர்த்துக் கொள்ளும் பதமாகிறது. புதைத்து வைத்து எடுக்கும் மதுவினைச் சிறுகுடியோர் பகிர்ந்து பலருக்கும் அளித்துப் பருகி மகிழ்வர்.