பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

143


நறுநெய்யில் வேர்க் கடலை வறுத்து எடுப்பர்; அவற்றை உண்டு மகிழ்வர். பெருந் தட்டுகளில் வடித்த சோற்றைக் கொட்டிப் பெருந்தோள் மகளிர் ஆர வைப்பர். இத்தகைய புதிய வருவாய்கள் மிக்கது. புலவர்கள் பாடும் புகழையும், பகவரை வெற்றி கொள்ளும் சிறப்பையும் உடைய பாரியின் பறம்பு. அது அழிந்து விடுமோ என்று அஞ்சுகிறேன்.

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல் கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப் பூழி மயங்கப் பல உழுது வித்திப் பல்லி ஆடிய பல் கிளைச் செவ்விக் களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி, மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக் கருந் தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து, வாலிதின் விளைந்த புது வரகு அரியத் தினை கொய்யக் கவ்வை கறுப்ப, அவரைக் கொழுங் கொடி விளர்க் காய் கோட் பதம் ஆக, நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல் புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து, நறு நெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டுப் பெருந்தோள் தாலம் பூசல் மேவர, வருந்தா யாணர்த்து நந்தும் கொல்லோஇரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை ஆடு கழை நரலும் சேட் சிமைப் புலவர் பாடி ஆனாப் பண்பின் பகைவர் ஒடு கழல் கம்பலை கண்ட செரு வெஞ் சேஎய் பெரு விறல் நாடே!

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

121. மலையமான் திருமுடிக்காரி

ஒரு திசை ஒருவனை நாடி நான்கு திசைகளில் இருந்தும் பரிசில் மாக்கள் வருவர்.