பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


அவர்கள் சிறப்பு அறிதல் அரியது ஆகும். மிக்கு ஈவது எளியது ஆகும். வள்ளன்மை மிக்க தலைவனே! அதனை நன்கு அறிவாயாக. புலவரிடம் பொது நோக்கு ஒழிக. அதுவே அவர்களை மதிப்பது ஆகும்.

ஒரு திசை ஒருவனை உள்ளி, நால் திசைப் பலரும் வருவர், பரிசில் மாக்கள்; வரிசை அறிதலோ அரிதே பெரிதும் ஈதல் எளிதே மா வண் தோன்றல்! அது நன்கு அறிந்தனைஆயின், பொது நோக்கு ஒழிமதி, புலவர்மாட்டே!

திணை - அது துறை - பொருண் மொழிக் காஞ்சி. மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது.

122. மலையமான் திருமுடிக்காரி

கடல்கோளால் உன் நாடு உன்னை விட்டு நீங்கியது

இல்லை.

நின் பகைவர் படையெடுத்து அதனைக் கொண்டதும்

இல்லை.

நீயாக விரும்பி வேள்வித் தீயை ஒம்பும் கேள்வி அந்தணர்க்கு வழங்கி அவர்க்குத் தந்துவிட்டாய். நாடு அந்தணர்க்கு என்று ஆகிவிட்டது.

மூவேந்தர்களுள் யாராவது ஒருவர் தம் படைக்குத் துணையாகுக என்று வேண்டியவராய்க் கொட்டிக் குவிக்கும் பொருளை உன்னை நாடி வரும் இரவலர்க்கு என்று தந்துவிடுகிறாய். உன்னை வாழ்த்தும் இரவலர்க்கு அவற்றைத் தந்துவிடுகிறாய்.

வடமீன் அனையாள் கற்புடைய உன் மனைவி; அவள் தோளை மட்டும் உனதாகக் கொண்டு உரிமை பாராட்டுகிறாய். உடைமை என்றால் அதனைத்தான் கூறமுடியும். மற்றைய யாவற்றையும் பிறர்க்குத் தருவது என்பது நீ கடமையாகக் கொண்டுள்ளாய்.