பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

ரா.சீ. 145 நினது என்று எதையும் வைத்துக் கொள்ளாத பெருமிதம் உன்பால் உள்ளது. அது மதிக்கத் தக்கது.

கடல் கொளப்படா அது, உடலுநர் ஊக்கார், கழல் புனை திருந்து அடிக் காரி நின் நாடே, அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே: வியாத் திருவின் விறல் கெழு தானை மூவருள் ஒருவன், துப்பு ஆகியர் என, ஏத்தினர் தரூஉம் கூழே, நும் குடி வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே: வடமீன் புரையும் கற்பின், மட மொழி, அரிவை தோள் அளவு அல்லதை, நினது என இலை நீ பெருமிதத்தையே.

திணை - பாடாண் திணை, துறை - இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

123. மலையமான் திருமுடிக்காரி

அரசர்களை அவர்கள் நாள் ஒலக்கத்தில் குடித்து மகிழ்வுடன் இருக்கும்போது புகழ்ந்து பாடினால் அவர்கள் மனம் குளிர்வர்; தனம் குவியும்; வேண்டிய பரிசில் பெறுவர்.

மலையமான் அவனைப் புகழவே தேவையில்லை; புலவன் என்று ஒரு சொல் யார் எப்பொழுதும் சொன்னாலே போதும் அவர் நிலைமை அறிந்து பரிசில் ஈவான்.

அவன் கள்ளுண்டு மயங்காமல் இயல்பாக ஈத்த இழையணி நெடுந்தேர் முள்ளுர் மலை உச்சியில் பெய்யும் மழைத் துளியினும் மிகுதியாகும்.

நாள் கள் உண்டு, நாள் மகிழ் மகிழின்,

யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே,

தொலையா நல் இசை விளங்கு மலையன்

மகிழாது ஈத்த இழை அணி நெடுந் தேர்

பயன் கெழு முள்ளுர் மீமிசைப்

பட்ட மாரி உறையினும் பலவே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.