பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



கவுளில் மறைத்து வைத்த கல்

அரசனிடத்து உள்ள ஆற்றல் வெளிப்படாது அடங்கிக் கிடப்பது; வேண்டும் போது வெளிப்படுவது என்று கூற வருகின்றார்.

‘அறிவு நூல் வல்லார்க்கும் அறிய முடியாத வலிமை உன்பால் உள்ளது” என்கிறார். அதற்கு அவர் தரும் உவமை அரிய செய்தியாக உள்ளது.

யானை தன் கவுளில் கல்லை மறைத்து வைக்கிறது. அது வேண்டும்போது எடுத்து எறிந்து வீசும் என்கிறார்.

இதை அவர் எப்படிக் கூர்ந்து பார்த்து இருக்கிறார் என்பது வியப்பைத் தருகிறது.

  • 4

களிறு கவுள் அடுத்த எறிகற்போல ஒளித்த துப்பினை 9-10|30 என்கிறார். அரிதில் எங்கோ காண்கின்ற ஒரு நிகழ்ச்சியை உவமையாகக் கூறும்போது அது தனிச் சிறப்பைப் பெறுகிறது.

சொல்ல வந்த பொருளை மிகப் பொருத்தமாக உணர்த்துகின்றார்.அரிய உவமை இது.

குயவர் வனையும் மட்பாண்டம்

சோழன் கரிகால் பெருவளத்தான் எதை விரும்பினாலும் தரக் கூடியவன். அவன் நாட்டு வளம் அத்தகையது என்று கூறுகிறார். அவன் வளம் மிக்க நாடு எதையும் படைத்துத் தரக்கூடியது என்கிறார். அதற்கு அவர் தரும் உவமை அரிய செய்தியாகிறது.

குயவர் சிறுவர்கள் தம் திகிரியில் மண்ணை வைத்துச் சுழற்றி அவர்கள் விரும்பும் மட்பாண்டத்தை வனை கின்றனர். அதுபோன்றது அவன் நாட்டு வளம் என்கிறார் கவிஞர்.

அரிய செய்தி; அழகிய உவமை; “ வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமண் குரூஉத்திரள் போல, அவன் கொண்ட குடுமித்து, இத் தண்பணை நாடே 8 - 10/32 என்கிறார். எதையும் அவன் தரக் கூடியவன்.