பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

13



அரிய உவமைகள்

குழி அகப்பட்ட யானை

அரசன் ஒருவன் பகைவர் சிறை அகப்படுகிறான். அவர்களிடமிருந்து தப்பி வெளியேறுகிறான். அதற்குத் தீட்டும்

உவமை அருமையானதாக உள்ளது.

யானை ஒன்று குழியில் அகப்பட்டுக் கொள்கிறது. அதிலிருந்து அது தப்பி வெளியேறுகிறது. பிறகு தன் கூட்டத்தோடு சேர்கிறது.

அதுபோல இவன் பகைவர் பிடியிலிருந்து தப்பிச் செல் கிறான்; தம்மவருடன் கூடுகிறான். அதற்கு இவ் உவமையைக் கூறுவது சிறப்பாக உள்ளது.

“ நீடுகுழி அகப்பட்ட

பீடு உடைய எறுழ்முன்பின் கோடு முற்றிய கொல்களிறு நிலை கலங்கக் குழி கொன்று கிளை புகலத் தலைக் கூடியாங்கு” 15 - 19/17

என்பது உவமை.

இரும்பு உண்ட நீர்

கானப் பேர் எயில் என்னும் ஊரை இழந்து விட்டான் வேங்கை மார்பன் என்பான்; அது மீட்டற்கு அரிது என்று கூற வருகிறார் கவிஞர். அதற்கு அவர் கூறும் உவமை அரியது ஆக உள்ளது.

“ கருங்கைக் கொல்லன் செந் தீ மாட்டிய

இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது 7 - 8/21

கொல்லன் செந்தீயில் காய்ச்சிய இரும்பு; அதில் தெறிக்கின்ற நீர் சுவறி விடுகிறது. மறுபடியும் அதனை எடுக்க இயலாது. அதுபோல் அந்த எயிலை மீட்க முடியாது என்கிறார். அரிய உவமை, இந்தக் காட்சியைப் புலவர் பலமுறை பார்த்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது.